Thursday, February 28, 2013

கண்ணில் அன்பை சொல்வாளே



கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள்
உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்
உள்ளங்கையில் பாசம் வைத்து உணவை தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்
இவள் போலே இவளை போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

கண்ணீர் துளிகள் வேண்டும் என்று கண்ணை கேட்கின்றேன்
கண்ணீர் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்
என்னை நானே காண்பது போலே இவளை பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளை கேட்கின்றேன்
உறவேன்னும் வார்த்தைக்கு தான் அர்த்தம் இங்கே கண்டேன்
இவள் அன்பின் வெளிச்சம் என்மேல் இரவும் பகல் தான் என்பேன்
என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே
சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் மௌனத்தினாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பை சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னை தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர் : பத்மநாபன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Wednesday, February 27, 2013

சுகவாசி சுகவாசி விடியிற


சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே ஓடி வந்தேன் தொட யோசி
இதுபோல இன்பம் ஏது ஏந்திக் கொள் விலைபேசி
சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி

ஊரே கண்களை மூடும் நல்இரவோடு
நாமோ கண்ணுரங்காமல் கற்பனையோடு
வாசம் பெண்களை சேரும் முப்பது நாளும்
அஹிம்சை சொல்வதை கேட்டால் தேயிந்து போகாது தேகம்

நிலவோடு பழகாத ராத்திரி பொழுதில் சுகமேது
அழகோடு கரைவோமே ஒவ்வொரு நொடியும் தொலைந்திடாது
தள்ளி இருக்காமல்
தன்னை மறக்காமல்
விலகாத போதை விலையாகி போக நேசம் கொள்வோம் வா

சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே ஓடி வந்தேன் தொட யோசி
இதுபோல இன்பம் ஏது ஏந்திக் கொள் விலைபேசி


நேற்றை எண்ணுவதாலே நிம்மதி இல்லை
நாளை என்பதும் கூட நிச்சயமில்லை
வாழு இப்பொழுதே நீ புன்னகையோடு
யாவும் கைகளில் சேரும் தேங்கி போகாமல் ஓடு

உறவாட பயந்தாலே வாங்கிய பிறவி பயனில்லை
கலவாட துணிவோமே பூமியில் எதுவும் தவறே இல்லை
எல்லைகள் மீறு
இல்லை தகராறு
எதுவான போதும் எதிர் நீச்சல் போடு அசிங்கம் இல்லை வா

சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
உறங்காத கண்களினாலே ஓடி வந்தேன் தொட யோசி
இதுபோல இன்பம் ஏது ஏந்திக் கொள் விலைபேசி

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர்கள் : சித்ரா, மால்குடி சுபா
வரிகள் : யுகபாரதி

Tuesday, February 26, 2013

ஜில்லா விட்டு ஜில்லா வந்த



வந்தனம்மா வந்தனம்மா எல்லோருக்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோஷமா கேட்கனும் கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும் விசுலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும் விசுலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளுய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளுய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளுய்யா
சொகத்த விக்குற பொண்ணுக்கும் மனசிருக்குது பார்ய்யா
சொகத்த விக்குற பொண்ணுக்கும் மனசிருக்குது பார்ய்யா

அஞ்சு பொண்ணு பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த எங்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அத சொல்லல
அஞ்சு பொண்ணு பெத்தெடுத்த அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த எங்கப்பனுக்கிது தெரியல
சொக்கனும் அத சொல்லல
சொக்கனும் அத சொல்லல 

வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்த்ததால ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானைய்யா மாப்பிள்ள
சீக்காளிக்கு மறுப்புள்ள
வலைய போல என்ன கட்டி போனான்ய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள
அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானைய்யா மாப்பிள்ள
சீக்காளிக்கு மறுப்புள்ள
வலைய போல என்ன கட்டி போனான்ய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பிள்ள அவன் துப்பில்லாத ஆம்பிள்ள

அஞ்சாம் நாளு மூட்டுவலியில் மாப்புள தான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒண்ணு போனா ஒண்ணு வந்து வருஷமெல்லாம் தேச்சுட்டான்
கனவ எல்லாம் ஒடச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடச்சிட்டான்
அஞ்சாம் நாளு மூட்டுவலியில் மாப்புள தான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒண்ணு போனா ஒண்ணு வந்து வருஷமெல்லாம் தேச்சுட்டான்
கனவ எல்லாம் ஒடச்சிட்டான் என் கனவ எல்லாம் ஒடச்சிட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிருல்ல மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி
இள மனச கெடுத்துச்சி
உசுர விட மானம் பெருசு புத்திக்குத் தான் தெரிஞ்சிச்சு
வயிரு எங்கே கேட்டுச்சு
ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் எங்கதைய முடிக்கிறேன்
ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன் எங்கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா
என் கதையை நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா
என் கதையை நீயும் கேட்டியா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா
கைகள் தாளம் போடய்யா விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 
விசிலு ராகம் பாடுய்யா 

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர் : தஞ்சை செல்வி
வரிகள் : மோகன் ராஜன்

Monday, February 25, 2013

இந்த இரவு தான் போகுதே




இந்த இரவு தான் போகுதே போகுதே
இழுத்துக் கட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே
இங்கே தான் சொர்க்கம் நரகம் இரண்டும் உள்ளதே
ஆந்தை போல தான் இரவிலே இரவிலே
கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே
இங்கே தான் இன்பம் துன்பம் இரண்டும் உள்ளதே
என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

இந்த இரவு தான் பிடிக்கிதே பிடிக்கிதே
அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே
இங்கே தான் சத்தம் அமைதி இரண்டும் உள்ளதே
இன்னும் இன்பம் தான் இருக்குதே இருக்குதே
ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
என்றாலும் கோடி இரவே எதிரில் உள்ளதே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே
என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே
பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்றுப் போடு இரவிலே
பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே
இன்பம் இந்த போதையாலே
மெய்யான இன்பம் இந்த போதையாலே

படம் : ஈசன்(2010) 
இசை : ஜேம்ஸ் வசந்தன் 
பாடியவர்கள் : சுக்வீந்தர் சிங், பென்னி தயால், சனந்தன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, February 22, 2013

என்னுள்ளே என்னுள்ளே




என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்றுப்பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்




படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சுவர்ணலதா

Thursday, February 21, 2013

உச்சந்தல உச்சியில

உச்சந்தல உச்சியில  - thiraipaadal.com

உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு


கண்மாயி நெறஞ்சாலும்
அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா
சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா
சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும்      
பாட்டு தமிழ் பாட்டு


தெம்மாங்கு கிளிகண்ணி
தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே
குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு
பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே
வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும்
பாட்டு எந்தன் பாட்டு


படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: மனோ

Wednesday, February 20, 2013

ராமனின் மோகனம்




ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு

இடமும் வலமும் இரண்டு
உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு

இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு


படம்: நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.ஜானகி

Tuesday, February 19, 2013

அழகிய மிதிலை நகரினிலே

அழகிய மிதிலை நகரினிலே - thiraipaadal.com

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊர் அறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேர் அறியும்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவர் என்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறி விடும்
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும்


படம்: அன்னை
இசை: ஆர்.சுதர்சனம்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: PB ஶ்ரீனிவாஸ், P. சுசீலா

Monday, February 18, 2013

ஒரு துளி விஷமாய் - ஆதிபகவன்


ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே
அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே
பிறக்குதே மயக்குதே
வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே
கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே

உன்னை மறக்க துணிந்து பார்த்தேன்
அட எந்தன் நெஞ்சம் அட் மறுக்குதே
வரைய வரைய அழித்துப் பார்த்தேன்
அதில் மீண்டும் உன்னை மனம் வரையுதே
மெளனத்தாலே பாசத்தாலே ஆசையாலே அவஸ்தையாலே
காதல் தேடி உயிர் உதறுதே

மரணம் தேடும் போதும் 
மயக்கம் கொண்டு ஜீவன்
வாழ்வதேன் வாழ்வதேன்
உறவுக்காக ஏங்கி மனுஷப்பூவும்
ஒன்று சாவதேன் சாவதேன்

தடை விதிக்காதே மனம் மண்டியிடும்போதம்
உயிர் துன்பப்படும்போதும்
உன்னை மறக்காதே

மறுமுறை இனி பிறப்பதா
உன் அருகில் தனித்திருப்பதா
காதலே இங்கு மறுப்பதா
இல்லை வெறுப்பதா
ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில்
இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்

காதல் என்னும் தீயில் கருகக்கூட
பெண்மை துணிந்ததே துணிந்ததே
அமில நதியைக் கூட அமுதம் என்று எண்ணி
நீந்துதே நீந்துதே

வலி தெரியாதே விழி பத்திக்கிற போது
உடல் தித்திக்கிற போது விலை கிடையாதே
உடைகிறேன் நான் உடைகிறேன் அட
உன் வசம் சரணடைகிறேன்
கரைகிறேன் மெல்ல உறைகிறேன்
உன்னில் நிறைகிறேன்
இனி முடிவெடு முடிவெடு இதயத்தில்
இதயத்தில் இடம் கொடு
துடிக்கிறேன் தவிக்கிறேன்
துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன்
படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: சிநேகன்
பாடியவர்கள்: ஷாரிப் சப்ரி, ஷ்ரேயா கோஷல்

Sunday, February 17, 2013

ஒரு நாள் அந்த ஒரு நாள் - தேவதை



ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா

கனவா வெறும் கதையா
இளநெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன்
நீ அறிவாயோ
உனைப் பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்துபோனேன்
நீ அறிவாயோ
காலம் காலம் கடத்தலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீறலாம் எதுதான் ஆகாது

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் உற்றே
ஏழு புவனம் வென்று வந்தேன்
நான் உன் முன்னே தோல்விதான் கண்டேன்

அருகினில் அன்று உனைக் கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகே இருந்தேன்
காதல் உலகில் மேற்கோடு வெளிச்சம் போவதில்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிப்பதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம்
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்


படம்: தேவதை
இசை: இளையராஜா
பாடல்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, இளையராஜா

Saturday, February 16, 2013

பாட வந்ததோர் கானம்




பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேன் ஊறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி


மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும்
நதிகள் விரைந்தால் கடலும் வழிவிடும்









படம்: இளமை காலங்கள் (1983)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: P. சுசீலா, கே.ஜே.யேசுதாஸ்

Friday, February 15, 2013

அந்தியிலே வானம்



அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்
கூடும் காவிரி இவ தான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்

கட்டுமரத் தோணி போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

வெள்ளி அலை தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
மல்லியப்பூ மாலை கட்ட
மாரியிட வேலை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன் தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ


படம்: சின்னவர்
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: மனோ, சுவர்ணலதா

Thursday, February 14, 2013

உயிர் அறுந்ததே



உயிர் அறுந்ததே
உடல் விழுந்ததே
ஓ உறவிழந்ததை மனம் மறுக்குதே
ஓ மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை
நம் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை

ஓ ஹோ
இது ஒன்பது வாசல் வீடு
பின்பு ஈசன் நாடும் காடு

உயிர் அறுந்ததே

படம் : எங்கேயும் எப்போதும்(2011) 
இசை : சத்யா 
பாடியவர் : சயனோரா பிலிப் 
வரிகள் : சரவணன்

Wednesday, February 13, 2013

ஏ ஆக்காட்டி ஆக்காட்டி




அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...

என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்

எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...

(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)

வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)

சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)

அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்

வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்

படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி 
பாடியது : ஜெயமூர்த்தி

Tuesday, February 12, 2013

நதியோரம் நாணல் ஒன்று





நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் மெல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையில்  மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தனக் காடு இருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீயெனை கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல

தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல







படம்: அன்னை ஓர் ஆலயம் (1979)
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: P. சுசீலா, S.P. பாலசுப்ரமணியம்

Monday, February 11, 2013

பாலமுரளி கிருஷ்னன் எங்கள் பால்ய நண்பனே



இந்த பாடலில் சில உச்சரிப்புகள் கேட்டு பாடகர் மனோ என்று சந்தேகத்துடன் எழுதியிருந்தேன்.  நன்றாக பல முறை கேட்டு பாலுஜியை தவிற யார் இப்படி கலக்கலாக பாட முடியும் என்று தோன்றியது. ஆகவே தாங்களூம் மீண்டும் கேளுங்கள்.

படம்: ??? (மொழி மாற்றம் படம்)
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி.. சித்ரா ??




ஆஆ..ஆஆஆ...ஆஆஆஆஆ
ஆஆ..ஆஆஆ...ஆஆஆஆஆ

மகமதநிச.. சகமதநிச..
ஆஆஆஆஆ..ஆஆஆஆஆ
ஓஹா... ஹிந்தோளம்
பிரமாதம் பாடுங்க பாட்ட

பாலமுரளி கிருஷ்னன் எங்கள் பால்ய நண்பனே
டி.எம்.சௌந்தரராஜன் எங்க்ள் ஆசை அண்ணனே
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் எங்கள் தோழனே
தியாகராஜ பாகவதர் எங்கள் பாட்டனே

உண்மையான சங்கீதம்
எந்த நாளும் என் சொந்தம்
ராக தேவனும் நாத பிரம்மனும்
வரம் தரும் ஸ்வரம் பெறும் பாடல்

ஆஆஆஆஆ பாலமுரளி கிருஷ்னன் எங்கள் பால்ய நண்பனே
டி.எம்.சௌந்தரராஜன் எங்க்ள் ஆசை அண்ணனே
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் எங்கள் தோழனே
தியாகராஜ பாகவதர் எங்கள் பாட்ட்ட்ட்டனே

காதல் பாட்டு பாடினால் மேனி புல்லரிக்குதா
வீணை மீட்டு பாடினால் கண்கள் பூப்பறிக்குதா
விசிலடித்து பாடினால் பாட்டு தாளம் போடுதா
கண்ணடித்து பாடினால் இரவு தேய்ந்து போகுதா
பூபாளம் பாடினால்.. பூகோளம் ஆடுதா..
ஹிந்தோளம் பாடினால் .. சந்தோசம் பொங்குதா

ஹஹ்ஹ ஹஹொ ஓஓஓஓஒ..ஓஓஓஓ

கல்யாணியில் பாடினால்.. கல்யாணம் நடக்குதா
ஸ்ரீராகம் பாடினால்.. சீமந்தம் காணுதா..

உங்க சாயம் வெளுக்குது.. பல்லு தந்தியடிக்குது
அந்த கழுதைக்கு என்ன தெரியும் கற்பூர பூவாசம்

ஆஆஆஆஆ பாலமுரளி கிருஷ்னன் எங்கள் பால்ய நண்பனே
டி.எம்.சௌந்தரராஜன் எங்க்ள் ஆசை அண்ணனே
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் எங்கள் தோழனே
தியாகராஜ பாகவதர் எங்கள் பாட்ட்ட்ட்டனே எய்..எய்..ஏய்..

சஜ்சமத்தில் பாடினால் உலகம் இங்கு உருளுதா
மத்யமத்தில் பாடினால் போதை கொண்டு முழுகுதா..
சத்தமாக பாடினால் சொர்ர்கப்பாதை தெரியுதா
சைலண்டாக பாடினால் சுத்தி சுத்தி சொருகுதா
வீடு கட்டி பாடினால்.. ஆகாயம் நிக்குதா?
சுதி ஏத்தி பாடினால்.. பாதாளம் தட்டுதா


ஹஹ்ஹ ஹஹொ ஓஓஓஓஒ..ஓஓஓஓ
அலை போலவே பாடினால் .. இசை விழிகள் விரியுதா
அதிகாலையில் பாடினால்.. சிறு மலர்கள் பனியுதா

கன்னித்தமிழில் பாடுதம்மா காதல் பூவனம்
நாங்கள் சஞ்சாரம் பன்னாத ஸாகித்தயம்

ஆஆஆஆஆ பாலமுரளி கிருஷ்னன் எங்கள் பால்ய நண்பனே
டி.எம்.சௌந்தரராஜன் எங்க்ள் ஆசை அண்ணனே
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் எங்கள் தோழனே
தியாகராஜ பாகவதர் எங்கள் பாட்ட்ட்ட்டனே ஐயேய் ஐயேய்

உங்க சாயம் வெளுக்குது.. பல்லு தந்தியடிக்குது

உங்க சாயம் வெளுக்குது.. பல்லு தந்தியடிக்குது

உங்க சாயம் வெளுக்குது.. பல்லு தந்தியடிக்குது

உங்க சாயம் வெளுக்குது.. பல்லு தந்தியடிக்குது


குறிப்பு: (இந்த பாட்டின் படத்தகவல்கள் இணையத்தில் இல்லை தேடி பிடித்து தாருங்கள். நன்றி. )

Sunday, February 10, 2013

விளையாட்டா படகோட்டி - தோனி



விளையாட்டா படகோட்டி - ஷ்ரேயா கோஷல்

விளையாட்டா படகோட்டி - ஹரிஹரன்


விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா

தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்

கட்டுமரம் என்றால் என்ன
வெட்டு பட்ட மரங்கள் தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்ட பாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப் பார்க்கும்
எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்
கடலிறங்கும் கட்டுமரம்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?

வெட்டுப்பட்ட காயம் தாங்கி
கட்டுமரம் வடிவம் கொண்டு
காட்டை விட்டு கடலில் வந்து கரை தேடும்
பட்டப்பகல் வெயிலில் காய்ந்து
நட்டநடு நிலவில் தோய்ந்து
வெட்டவெளி வானம் பார்த்து விளையாடும்
கடலில்தான் திரிந்தாலும்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு?


 படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ஹரிஹரன்






Saturday, February 9, 2013

சின்ன கண்ணிலே - தோனி

சின்ன கண்ணிலே -திரைப்பாடல்.காம்

சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
என் நெஞ்சின் கதைகளைப்
பிண்ணி வலைகளாய் வீசினாய்
இந்த புன்னகை எங்கு வாங்கினாய்
நீ தினமும் பூப்பதால்
நேற்று நாளையைத் தாண்டினாய்

இரு கை நீட்டி
சிறு தலையாட்டி
இரு விழியாலே
புது ஒளி கூட்டி
நான் வாழ வந்ததின்
அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
வைரமணிகளை சிரித்துத் தெளிக்கிறாய்
மழலைப் பூவே வா

புதியது குழந்தை உலகம்
நுழைந்திட வழிகள் வேண்டும்
குழந்தையின் வயதும் மனதும்
கிடைத்திட வரங்கள் வேண்டும்
ஒரு தீவில் பூக்கும்
சிறு பூவைப் போலே
இதழை திறந்து பேசும்
உனது மழலை போதும்
உன் மொழி தேன்மொழி
என் மொழி வீண்மொழி
உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி
அந்த ஆகாயம் இந்த பூலோகம்
அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி?

நடைவண்டி பழகும் வயதில்
நடந்திட நானும் முயன்றேன்
நடந்திட கடந்த தூரம்
உனக்கது தொடர வேண்டாம்
இந்த உலகின் அழகை
நீ அழகு செய்தாய்
உன் சிரிப்பின் ஒளியில்
இரவை வெளிச்சம் செய்தாய்
உன்னிடம் பாடல்கள் எத்தனை உள்ளது
என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
சிறுகை தீண்டி என் மெய் தீண்டி
என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி?


படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷால், நரேஷ் ஐயர்

Friday, February 8, 2013

தாவித் தாவி போகும் மேகம்

தாவித் தாவி - திரைப்பாடல்.காம்

தாவித் தாவி போகும் மேகம் பொழியும் நேரம்
காயப்பட்ட நெஞ்சில் ஈரம் ஊற்றும்

அந்த நீர்மேகம் எங்கு போனாலும்
உந்தன் பின்னால் என்றும் துணையாய் இங்கு தொடராதோ!

விளையாடும் மைதானம்
அங்கு பலமாய் கரகோஷம்
வெறும் பந்தாய் நாமிருந்தால்
பல கால்கள் விளையாடும்
நாளை என்ன ஆகுமென்று அறியாமல்
காலை மாலை வேளை தோறும் தூங்காமல்
அதிகால நேரத்தில் புது வெளிச்சம் தூரத்தில்
என்னருகில் வந்து என்னைத் தொட்டு தழுவ


கடலலைகள் நிரந்தரமா?
அவை ஒவ்வொன்றும் புதிது
அதில் குமிழாய் நுரைகளுமாய்
வரும் கவலை உடைகிறது
எந்த காற்று தீண்டுமென்றா குழல் தேடும்?
எந்த காற்று நுழைந்தாலும் புது இசை பாடும்
நாம் வாழும் காலத்தில் அட யாரும் தனியில்லை
உன் தனிமை தன்னை தனிமையாக்கும் துணைகள்


படம்: தோனி
இசை: இளையராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: இளையராஜா

Thursday, February 7, 2013

மூன்று பேர் மூன்று காதல் - உனக்காகவே உயிர்



உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
எதிர் காற்றிலே குடை போலவே
உன்னை பார்த்தும் சாய்கிறேன் உயிரே
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே

டச் பை என் நெஞ்சே
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை என் நெஞ்சே
என் கை உன் கை சேரட்டும்

மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்கு சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிளும் தனிமை
உன் ஈர கூந்தல்
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்
என் ஆவல் திண்ட வேண்டுமே

டச் பை என் நெஞ்சே
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை என் நெஞ்சே

முதல் காதலும் மயில் இறகு தான்
அள்ளி சேர்க்குதே இந்த இந்த மனசு தான்
அது வளருமா அன்பே காத்தாடி போலே
என் காதல் ஆகும் ஆகுமே
கை விட்டு போனால்
எங்கேயோ போகும் போகுமே

டச் பை என் நெஞ்சே
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை என் நெஞ்சே

டச் பை என் நெஞ்சே
எங்கேங்கும் மின்னல் பாயட்டும்
டச் பை என் நெஞ்சே

படம் : மூன்று பேர் மூன்று காதல் (2013)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
வரிகள் : நா. முத்துக்குமார்

Wednesday, February 6, 2013

மூன்று பேர் மூன்று காதல் - ஸ்டாப் த பாட்டு




ஸ்டாப்  த பாட்டு ஸ்டாப்  த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
ப்ர்ஸ்டு லவ்வு நெனப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா
என்னமோ ஆறேன் இந்த பாட்டால தான்
அவள தான் தேடி கண்ண மூடி இது போக சொல்லுதே

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ராத்திரி தூக்கத்தில் கேட்கையில் கண்ணீர் வருதே
ராட்டினம் போல் அவள் காதலை சுற்றி விடுதே
சந்தோஷம் என்பேனா சோகங்கள் என்பேனா
என்னாளும் நீங்காத ஏக்கம் இது
சங்கீதம் போல இந்த மண் மீது வேறெது
சட்டென்று ஈர்கின்ற பாட்டு இது
சிரித்தேன் அழுதேன் இந்த பாட்டில் கரைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

யார் அவன் ராகத்தில் சோகத்தை மீட்டி சொன்னான்
யார் அவன் என் மனம் நினைப்பதை பாட்டில் சொன்னான்
சந்தேகம் இல்லாமல் என் வாழ்வை யாரோ தான்
எட்டி தான் பார்க்கின்ற மாயம் இது
முன்னாடி போனாலும் பின்னாடி போனாலும்
எங்கேயும் கேட்கின்ற கானம் இது
புதிதாய் பிறந்தேன் இந்த பாட்டில் தொலைந்தே போனேன்

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

ஸ்டாப்  த பாட்டு ஸ்டாப்  த பாட்டு
இந்த பாட்டு வேணாம் தலைவா
ப்ர்ஸ்டு லவ்வு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேணாம் தலைவா

விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்டுக்கு ஆடாம இருக்க முடியல
விடு விடு விடு விடு தலைவா
இந்த பாட்ட பாடாம இருக்க முடியல

படம் : மூன்று பேர் மூன்று காதல் (2013)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ரமேஷ் விநாயகம்
வரிகள் : நா. முத்துக்குமார்

Monday, February 4, 2013

மறக்க முடியவில்லை



மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

ஐந்தில் அறிந்த சரிகமபதநி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டுச்சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைக்கின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை

படம் : ஜாதி மல்லி (1993)
இசை : மரகதமணி 
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் , சித்ரா
வரிகள் : வைரமுத்து

Sunday, February 3, 2013

கம்பன் எங்கு போனான்



கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

அணை விட்டு தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா

எங்கள் பேரை யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்

எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்

விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

அட புத்தம் புதியது சொந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்

காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே

கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே

நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

படம் : ஜாதி மல்லி (1993)
இசை : மரகதமணி 
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் , சித்ரா
வரிகள் : வைரமுத்து

Saturday, February 2, 2013

எங்கெங்கே எங்கெங்கே



ஒ எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
ஒ என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லி புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்

என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்

பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில் போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே

என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்

உன் ஆடையின் பொன் நூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்

நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா முறையா
காதல் பிறந்தால் இது தான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சு நெஞ்சம் பத்திக் கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளி தான் நான் உந்தன் கிளை தான்
செல்லாதே தள்ளி செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர்கள் : ஹரிஹரண், ஆஷா போஸ்லே
வரிகள் : வைரமுத்து

Friday, February 1, 2013

மாயாவி - முகமூடி



மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான்
நெஞ்சில் அணைத்திடும் மழையென நனைத்திடுவான்

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு
மனதோர் உருவம் வரைகிறதே  காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகள் இருந்தும்
உனைக் காண முடியாததுவோ


படம்: முகமூடி
இசை: கே
பாடல்: மதன் கார்க்கி
பாடியவர்: சின்மயி

துடிக்கின்ற காதல்



மனமே திகைக்காதே
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

இனி முத்தங்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்

என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மாலை வந்து சேரும் முன்னே
பிள்ளை வந்து சேரலாம் எவர் கண்டார்

அத்துமீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

என் தூக்கத்தை நீ திருடலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

நீ கண்களை கைது செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்

மோகம் வந்தால் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்

உன்னை விட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்

மனமே திகைக்காதே

உனை பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளை தொலைத்ததை எவர் கண்டார்

உனை பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்ல குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே


படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர்கள் : மனோ, அனுபமா, பவதாரணி
வரிகள் : வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam