Thursday, April 30, 2009

மலரென்ற முகமின்று சிரிக்கட்டும

மே ஒன்றாம் தேதி பிறந்தநாளைக்கொண்டாடும் சென்ஷிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நாகேஷை நினைத்தாலே ஞாபத்துக்கு வரும் அவளுக்கென்ன ஏற்கனவே ஒலிபரப்பப்பட்டுவிட்டது அடுத்தது இந்தப்பாடல் தான். சென்ஷியின் குரு நாகேஷ் பாட்டையே அவருக்கு பரிசளிப்போம்.




மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும் ( மலரென்ற)
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும் ( மலரென்ற)

டுய்யூ டுய்யூ டுய்யூடூ
ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை( அஞ்சிடும்)
அல்லித்தண்டு
வெள்ளித்தண்டை
முத்துச்செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்னக்கண்டுத்
துள்ளிச்செல்லும் எண்ணங்கள்
(மலரென்ற)


பொன்மகள் காதல் அன்னம்
பூமகள் கண்கள் மின்னும் (பொன்மகள்)
நெஞ்சமே துள்ளும் வண்ணம்
கொஞ்சுவாள் தங்க கிண்ணம்(நெஞ்சமே)
முல்லைப்பூவும் சேர்ந்து வந்த கன்னிப்பூ
கொள்ளை கொள்ள இங்குவந்தாள்
கோலம் கொள்ளும் தாழம்பூ
( மலரென்ற )



திரைப்படம் : காதலிக்க நேரமில்லை
பாடியவர் : எல். ஆர் . ஈஸ்வரி.
இசையமைத்தவர்:விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்

Monday, April 20, 2009

1001 பொட்டு வைத்த முகமோ



அன்பு உள்ளங்களே...

இதோ 1001 ஆவது பதிவாக நமது தளத்தின் பெயரிலேயே ஒரு ஒலித்தொகுப்பு இந்த பதிவு தான் முதல் என்று நினைக்கிறேன் (அதாவது தேன் கிண்ண பெயரிலே வருவது) எப்படி தேன் எத்தனை தடவை ருசித்தாலும் திகட்டாதோ அதே போல் தான் நம் மனதை வருடும் கீதங்கள்...அதுவும் பழைய கீதங்கள் எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை. இந்த ஒலித்தொகுப்பில் உள்ள பாடல்கள் பட்டியலை பாருங்கள் உங்களுக்கே தெரியும். நான் அதிகம் எழுதி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. உடனே தரவிறக்கம் செய்து கேளூங்கள். உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள். அதுசரி இவ்ளோ பாடல்கள் இருக்கும் போது ஏன் பொட்டு வைத்த முகமோ பாடல் மட்டும் டைட்டிலி கொண்டுவந்தீங்க என்று கேட்பது புரிகிறது சார். பாலுஜி ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த பாடல் ஒலிப்பதிவு செய்த அன்றே இரவில் அகில இந்திய வானொலியில் சுடச்சுட ஒலிப்பரப்பினார்களாம். அதான் ஸ்பெஷலாக போட்டேன் நம்புங்க சார் வேறு ஒரு காரணம் இல்லை.. ஹி.. ஹி..ஹி..

ஒலித்தொகுப்பு உதவி நன்றி ரெயின்போ பண்பலை.

1.பாட்டுப்பாடவா,தேன்நிலவு,ஏ.எம்,ராஜா
2.அழகிய மிதிலை நகரிலே,அன்னை,பி.பி.ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா
3.இந்த பொன்னான கைகள்,காதலிக்க நேரமில்லை,
4.எனக்குள்ளே நீ இருக்க,ஜீவனாம்சம்
5.கன்னி இவள் தேனிறைக்க,படித்தால் மட்டும் போதுமா,பி.சுசீலா
6.பிருந்தாவனமும்,
7.ராதைக்கேற்ற கண்ணனோ.சுமைதாங்கி,எஸ்.ஜானகி
8.நான் யார் என்பதை,துணைவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
9.ஆஹா மெல்ல நட,புதியபறவை, டி.எம்.எஸ்
10.செல்லக்கிளிகளாம்,
11.முத்துக்களோ கண்கள், நெஞ்சிருக்கும் வரை,டி.எம்.எஸ், பி.சுசிலா
12.அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு,
13.பொட்டு வைத்த முகமோ,சுமதி என் சுந்தரி,எஸ்.பி.பி,
14.வெள்ளிக்கிண்ணம் தான்,

Get this widget | Track details | eSnips Social DNA

Sunday, April 19, 2009

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே - 1000 மாவது தேன் சொட்டு

போரின் பிளந்த வாயில் அகப்பட்டிருக்கும் தமிழீழ மக்களுக்காகவும் உலகின் போர்க்களங்களிலெல்லாம் அநியாயமாக அகப்பட்டிருக்கும் மக்களுக்காகவும் ஏனைய உயிர்களுக்காகவும் தேன் கிண்ணத்தின் 1000 மாவது பாடலாக இந்தப்பாடல் அமைகிறது.

சின்ன வயசில படிக்கேக்க எதியோப்பியாவில் பட்டினியால் ஒட்டிய உடலுடன் இருந்த அந்தப் பெடியனைப் புத்தகத்தில் பார்த்தது போல இப்ப ஒவ்வொரு நாளும் என்ர இரத்த உறவுகளைப் பார்க்கிறேன். பசியால் கதறிய குழந்தையைப் பார்க்க சகிக்காமல் செல்லடிக்கு பயந்து இருந்த கணவனைப் பால்மா வாங்கிவா என்று கட்டாயப்படுத்தி அனுப்பிய மனைவி கணவனின் சிதறிய உடலைப்பார்த்து கதறி அழுவதைப் பார்க்கிறேன். யுத்தத்தின் இன்னொரு கோர முகமாக தினமும் என் சகோதரிகள் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு கொலை செய்யப்படுவதை வாசிக்கிறேன். குழந்தைகளை மலர்களுக்கு ஒப்பிடுகிறார்கள்: அந்த மலரொன்று மலரும் முன்னமே இரத்தம் கசிய கசிய பிய்த்து எறியப்படுவதைக் கண்ணீரோடு பார்க்கிறேன்.கடவுளின் குழந்தைகள் என்று சொல்லப்படுகின்ற கட்புலன் ,செவிப்புலன் இழந்த சிறார்கள் எல்லாம் இரத்த வெள்ளத்தில் சிதறிப்போய்க் கிடக்கிறார்கள் : கடவுள் கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிற மாதிரியிருக்கு.மனம் பிறள்கிறது.

போரால் சபிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் மட்டுமல்ல அப்பாவிச் சிங்களவர்களும் தான். முந்தநாள் ஊருக்குப் போன் பண்ணும்போது மாமா சொன்னார் வன்னிக்கு அனுப்புறதுக்காக அவேன்ர வீட்டுக்கிட்ட இருந்த 2 சென்ரி எடுத்தாச்சாம். ஒரு சென்ரில இருக்கிற ஆமி வந்து 2 நாளா சாப்பாடு வரேல்ல என்று அழுவாராப்போல சாப்பாடு கேட்டதாம்.

ஒருமாமா தலையில காயப்பட்டு இருக்கிறார் என்று செய்தி வருகிறது. மற்ற உறவுகள் உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ என்று ஏங்கி ஏங்கி தினமும் காலையில் இணையத்தளங்களில் இறந்தவர்கள், காயப்பட்டவர்களின் பெயர்களை தடவித் தடவிப் பார்க்கிறேன். வேலைக்குப் போனாலும் வேலை செய்யமுடியாமல் இருக்கிறது. வேலையிலிலருந்தும் உடல் கருகி வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும் அண்ணாமார்களையே திரும்ப திரும்ப பார்க்கிறேன். இனிமேலும் தாங்க முடியாது.விடியும் பூமி அமைதிக்காக விடியட்டும்.


வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!

(வெள்ளைப் பூக்கள்)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!

(வெள்ளைப் பூக்கள்)



படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல்: வைரமுத்து
இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்

Tuesday, April 14, 2009

999. கடவுள் தந்த அழகிய வாழ்வு

மலேசியப்பதிவர் "காலச்சிறகுகள்" உஷா வின் பிறந்தநாளுக்கு தேன்கிண்ணம் வாழ்த்துப்பாடல் இசைக்கிறது .. வாழ்த்துப்பாடல் இசைக்க கேட்டவர் சென்ஷி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..


எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த)


நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே
கேளடி
( கடவுள் தந்த அழகிய வாழ்வு )



திரைப்படம்: மாயாவி
பாடியவர்கள்:கல்பனா , SPB சரண்
இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத்

Saturday, April 4, 2009

998. காதல் யோகி காதல் யோகி




காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்துஹ்
ஞானம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
(நான் காதல்..)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஏ காதல் யோகி

இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உறைத்திடவானோ
இல்லை நின்று விழுங்கிவிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
கானும் உலகம் விட்ட யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: TL மகாராஜன், அனுராதா ஸ்ரீராம்

Thursday, April 2, 2009

997 பார்வை யுவராணி கண்ணோவியம்



அன்று வந்தது இதே நிலா >> என்னபப்பொருத்தம் >> தொட்டால் பூமலரும்
செந்தூர்ர் முருகன் கோவிலில் >> பத்து பதினாறு முத்தம் முத்தம் >>
வெள்ளி கிழமை விடியும் வேளை >> பார்வை யுவராணி கண்ணோவியம்

Get this widget | Track details | eSnips Social DNA


அன்பர்களே சிவந்த மண் என்ற படத்தில் வரும் இந்த பாடல் இந்த ஒலித்தொகுப்பில் இறுதில் வருகிறது ஒலித்தொகுப்பை கேட்கும் முன்.

மங்கையர் தின வாழ்த்துக்கள் ஏன்? எதற்கு? ஆமாம் அன்பர்களே மங்கையர் தின வாழ்த்துக்கள் ஏன் வாழ்த்துகிறோம், எதற்கு பாராட்டுகிறோம் என்றோ நாம் யோசித்ததுண்டா?
எல்லோரும் வாழ்த்துகிறோம் என்று நாம் வாழ்த்துகிறோம் அப்படித்தானே? என்னடா இது? யார் இது என்று மங்கை, மகளிர்களே அவசரப்பட்டு ஆட்டோவை எடுத்து ரவுண்ட் கட்ட வந்துடாதீங்க அம்மணிகளே? அப்படி வந்தாலும் இந்த பதிவில் என்ன விசயம் என்று கேட்காவாவது வாருங்கள், கேளூங்கள். சரி சரி விசயத்துக்கு வருகிறேன்.

வழக்கம் போல மீண்டும் கண்டுபிடி, கண்டுபிடி என்று ஓர் சொல் ஒலித்தொகுப்பை எடுத்துக்கொண்டு உங்களை குழப்ப வந்துவிட்டேன் அன்பர்களே. நான் மேலே கேட்ட கேள்விக்கு இது வரை எத்தனை பேருக்கு காரணம் தெரிந்திருக்கும் என்று எனக்கு தெரியாது. அதிகபட்சம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் இணைய தள நண்பர்களூம் தெரிந்து வைத்துருப்பார்கள்.ஏன் வாழ்த்துகிறோம் என்ற தெரியாத அன்பர்களூக்காக (என்னையும் சேர்த்து தான்) இதில் என் ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தகவல்கள் திரட்டி ,அதாவது தெரியாதவர்களூக்காக
வழங்கியிருக்கிறார்.

மேலும். இதே போல் ஆக்கங்கள் தேர்ந்தெடுத்து வழங்குங்கள் இணையதள அன்பர்கள் மிகவும் ரசிப்பார்கள் (ரசிக்கிறீர்கள் தானே?) என்று நான் சென்ற பதிவில் அவரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அவர் செவி மடுத்து மிகவும் சிரமப்பட்டு பாடல்கள் தேடி பிடித்து ஒரு நிகழ்ச்சியாக வழங்கியிருக்கிறார் மேலும் இதுபோன்று தொடரும் என்று நம்புவோம்.

ஏன் வாழ்த்துகிறோம் என்ற காரணத்தை நான் இங்கு எழுதப்போவதில்லை மாறாக நீங்கள் அவசியம் இந்த ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டுதான் தெரிந்து கொள்ளவேண்டும். (ஹி..ஹி.. ஹி...அப்படியாவது கேட்ப்பீர்களோ என்ற ஓர் நப்பாசை தான்)

மிகவும் நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பில் வழக்கம் போல் ஒர் சொல் எல்லாப்பாடல்களில் வருகின்றன. அது என்ன சொல் என்று எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறீர்களோ நீங்கள் தான் இணையதள அசகாயசூரர்கள். வழக்கம் போல் எத்தனை நேயர்கள் மண்டையை போட்டு குடைந்து கொள்கிறார்கள் என்று நீங்களே கேட்டுவிடுங்கள்.ஒருமணி நேரம் இந்த ஒலித்தொகுப்பு கேட்டு உங்கள் வேலை தடைப்பட்டால் அதற்கு நான் பொருப்பல்ல வேலைக்கு போகும் போதோ வரும்போது அல்லது ஓய்வு நேரத்திலோ ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள். மறகாம உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்க ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

மூச்சு முட்ட ஓடி வரும் ஓட்டப்பந்தய வீரர் ஓரு மரநிழலில் நின்று ஆசுவாசமாக மூச்சை இழுத்து இளைப்பறுவாரே அதேபோல் இந்த தளத்தில் அடித்து ஆடும் பதிவாளர்களுக்காக இறுதியாக இந்த பதிவை தேன் கிண்ணத்தில் 1000 ஆவது பாடலாக பதியவரும் பதிவாளருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். யாராக இருந்தாலும்
அவருக்கு முன்கூட்டியே என்னுடைய முதல் வாழ்த்துக்கள். அபப்டியே வெற்றி பெற்ற மேட்டுப்பாளையம் திருமதி.உமா ரவிச்சந்திரனுக்கும் வாழ்த்துக்கள்.

Last 25 songs posted in Thenkinnam