Wednesday, May 28, 2008

473. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா




பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே மணம் கொண்டு வா
பழகும் கிளிகள் இங்கு பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே

(பூவாடைக் காற்றே)

சொர்க்கத்தை மண் மீது
காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே
உடைகள் ஆகுங்களேன்
ஓடும் மேகங்களே சொல்லுங்களேன்
உடைகள் ஆகுங்களேன் நில்லுங்களேன்
வசந்தம் எங்கள் வாழ்விலே

(பூவாடைக் காற்றே)

ஆகாகா ஆனந்தம்
பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை
அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை யாருமில்லை
அள்ளக் கைகள் இல்லை நேரமில்லை
குழந்தை செய்த சாதனை

(பூவாடைக் காற்றே)


படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்

***

விரும்பிக் கேட்டவர்: மு. மயூரன்

5 Comments:

நிலாக்காலம் said...

நன்றி :-)

nagoreismail said...

இந்த பாடலின் எம் பி 3 வடிவு கிடைக்குமா?

கப்பி | Kappi said...

நாகூர் இஸ்மாயில்

இங்க இருக்குங்க!

http://music.cooltoad.com/music/song.php?id=99788

nagoreismail said...

'மை பிரண்ட்' அவர்களுக்கும் 'கப்பி பய' அவர்களுக்கும் 'தேன் கிண்ணம்' குழுவினருக்கும் மிக்க நன்றி

மு. மயூரன் said...

என்னுடைய விருப்பத்தை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறைவேற்றி விட்டீர்கள்.

இன்றைக்குத்தான் பார்த்தேன்.
மிகவும் மிகவும் நன்றி..

Last 25 songs posted in Thenkinnam