Saturday, May 24, 2008

462. நிக்கட்டுமா போகட்டுமா


நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
கோடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)

படம்: பெரிய வீட்டு பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா

1 Comment:

pudugaithendral said...

ஒளியும் ஒலியுமில் இந்தப் பாடல் வரும்போதெல்லாம் நானும் தம்பியும் சேர்ந்து கலாய்த்தது நினைவுக்கு வருகிறது.

:)))))))))))

Last 25 songs posted in Thenkinnam