Thursday, May 22, 2008

456. மூங்கில் காடுகளே...




மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...
(மூங்கில்)

இயற்கை தாயின் மடியில் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து...பறந்து பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மனக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் யங்கள்* காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ
(மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...

மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...
(மூங்கில்)

படம்: சாமுராய்
இசை: ஹர்ரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ரம்யா ரமணி

2 Comments:

Ramya Ramani said...

என்னுடைய விருப்ப பாடலை பதிந்ததிற்கு மிக்க நன்றி!

Anonymous said...

enakku thambi vettothi sundaram la irunthu kolagaara paadal vendum. athu enakku migaum pidithamaana paadal.


Anitha

Last 25 songs posted in Thenkinnam