Tuesday, May 20, 2008

450. பாட்டும் நானே பாவமும் நானே



ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)

படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: சுவேக்

3 Comments:

வல்லிசிம்ஹன் said...

அருமையோ அருமை. நன்றி,நன்றி நன்றி.

கருப்பன் (A) Sundar said...

கண்ணதாசனின் கலக்கல் பாடல், நன்றி!

Anonymous said...

கவியரசரின் பொருள் செரிந்த பாடல்

Last 25 songs posted in Thenkinnam