Thursday, May 15, 2008

434. பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா




பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா
ஊத்துக்குளி வெண்ணை போல பொண்ணு இருக்கா
கெட்டிமேளம் கொட்டியாச்சு கெட்டியாக ஒட்டியாச்சு
கட்டில் இனி தொட்டிலாகுமா?

பட்டு வேட்டி சட்டை மேலே சிட்டு உரச
ஊத்துக்குளி முத்தை போல பையன் சிரிக்கான்
கண்ணும் கண்ணும் கலக்கணும் கலக்கணும்
கலவரமொன்று நடக்கணும் நடக்கணும்
பத்து மாசம் பொறுக்கணுமா

ஆணென்ற ஒரு கரை
பெண்ணென்ற மறு கரை
வாழ்வென்ற நதி வந்து
காதல் என்னும் கடலில் கலக்கட்டுமே

பிறையில் சிலிர்த்து கொஞ்சம்
உறையை கொடுத்து நல்ல
உறவை வளர்த்து வாழவே
கல்யாண மாங்கல்யம்

கண்ணிப் பெண்ணும் வாழியம் ஒன்று
தலையை குனிந்து பார்க்கும் இன்று
கல்யாணத்தில் இரண்டையும் கட்டி வைக்கிறோம்
ஆசை நெய்யாய் எறிவதினாலே
மந்திர தீயும் மணமகன் போலே
கல்யாணந்தான் முடிந்தபின் அணைக்க சொல்கிறோம்

நீ சொந்த காலை ஊன்றி நின்று
சொந்தங்களை தாங்க வேண்டும்
வந்த காலில் பள்ளம் சொல்லுமே
அட வாயார வாழ்த்தியவர்
வயிரார உண்ண சொல்லி
பந்தியிலே இலைகள் சொல்லும்

மத்தளம் கெட்டி மேளம் சத்தம் கேட்கும்
தாம்பூளம் வந்தவர்க்கு நன்றி உரைக்கும்
சந்தோஷத்தின் வாசப்படிதான்
கல்யாண மாங்கல்யம்

பாசம் கொட்டி வளர்த்த அன்னை
பல்லாங்குழி ஆடிய திண்னை
பிரிந்து நீயும் போகும்போது
கண்ணிர் சுரக்கும்

காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம்
கேள்வி கொஞ்சம் பதிலும் கொஞ்சம்
கண்னை கட்டி காட்டில் விட்ட
வேளை இருக்கும்

நெஞ்சுக்குள் உருண்டோடும்
உணர்வுக்கு வடிவங்கள்
சரியாக யார் சொல்லுவார்?
அவன் தோள் சாய வந்தவளை
உயிர் தந்து கரை சேர்க்க
துடிப்பதை யார் சொல்லுவார்?

எல்லார்க்கும் இந்த வேலை வாழ்வில் இருக்கும்
கல்யாணம் புதிதில்லை பூக்கள் தொடுக்கும்
இது வாழ்க்கைக்கு வாசப்படிதான்
கல்யாண மாங்கல்யம்

பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா
ஊத்துக்குளி வெண்ணை போல பொண்ணு இருக்கா
கெட்டிமேளம் கொட்டியாச்சு கெட்டியாக ஒட்டியாச்சு
கட்டில் இனி தொட்டிலாகுமா?

பட்டு வேட்டி சட்டை மேலே சிட்டு உரச
ஊத்துக்குளி முத்தை போல பையன் சிரிக்கான்
கண்ணும் கண்ணும் கலக்கணும் கலக்கணும்
கலவரமொன்று நடக்கணும் நடக்கணும்
பத்து மாசம் பொறுக்கணுமா

ஆணென்ற ஒரு கரை
பெண்ணென்ற மறு கரை
வாழ்வென்ற நதி வந்து
காதல் என்னும் கடலில் கலக்கட்டுமே

பிறையில் சிலிர்த்து கொஞ்சம்
உறையை கொடுத்து நல்ல
உறவை வளர்த்து வாழவே
கல்யாண மாங்கல்யம்

படம்: கலாப காதலன்
இசை: நிரு
பாடியவர்கள்: நித்யாஸ்ரீ, கிருஷ்ணராஜ், ஸ்ரீராம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam