Saturday, May 10, 2008

420. பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா

அசல்:

ரீமிக்ஸ்:


பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல்
ஒரு அம்மாண்டி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி
அவள் சேலை கட்ட பார்த்தா போதும்
ஒரு அம்மாண்டி ராணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா

பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே
கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே
அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: அபி அப்பா

5 Comments:

ஆயில்யன் said...

//விரும்பி கேட்டவர்: அபி அப்பா//

//அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா//

நல்லா இருக்கு பாட்டு :))

ஆயில்யன் said...

//விரும்பி கேட்டவர்: அபி அப்பா//

நல்லா இருக்கு:)

ஆயில்யன் said...

//அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா//

பிடிச்சிருக்கு:))

(அவசரத்துல பர்ஸ்ட் கமெண்ட் ஸோ அத மறந்துடுங்க:))

வல்லிசிம்ஹன் said...

அதென்ன ஆயில்யன் நேற்றுவரை ஒருத்தி இல்லையாவா.அநியாயமா இருக்கே:)

சினிமா - 4D ஹிந்தி இசையமைப்பாளர்கள் said...

வியட்னாம் வீடு 1970இல் வெளிவந்த படம்.

Last 25 songs posted in Thenkinnam