Monday, May 5, 2008

413. கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா




ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு உன் முகத்தில் என்னம்மா
நிழலைப் போல நிழலைப் போல உறவாடு - என்
நினைப்பைப் போல நினைப்பைப் போல மனசோடு
அடி ஆரிராரி ராரி ராரி
ஹே கோபம் என்ன கொஞ்சிப் பேசு கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு உன் முகத்தில் என்னம்மா

ஹே வீணே மறக்கிறியே நீயே நீயே ஆ...ஆ...
தானே சிரிக்கிறியே நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம் - தினம்
ஊரு தூங்க வரும் பாசம்
ஏ சின்ன குழந்தைதான் நானே மானே
வேஷம் போடவில்லை வீணே - நெஞ்சில்
பாசம் பொங்குதடி மானே
சிறு வாடைக் காத்து வீசிறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் சொல்லம்மா
சின்னக் கண்ணம்மா

ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே பூஞ்சிவப்பு உன் முகத்தில் என்னம்மா

பூவே ரசிக்கிற பூவே பூவே...
தானா மணக்கிற நீயே நீயே
உன்னைப் போல ஒரு வாசம் - இந்தப்
பூவும் பூக்கிறப்போ வீசும்
எங்கோ தடங்கிறியே பேச்சு பேச்சு - அது
எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி விளக்க ஏத்தி வைக்கலாமா
வலையைப் போட்டு மீனைப் பிடிக்கும் ஆம்பிள - நீ
வலையை வீசிப் புடிக்க இங்கே மீனில்லை
அது நானில்லை

ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே கோபமில்லை கொஞ்சிப் பேசு ராசையா
ஹே பூஞ்சிவப்பு உன் முகத்தில் என்னம்மா
நிழலைப் போல நிழலைப் போல உறவாடு - உன்
நினைப்பைப் போல நினைப்பைப் போல மனசோடு
அடி ஆரிராரி ராரி ராரி
ஹே கோபமில்லை கொஞ்சிப் பேசு ராசையா
ஹே ராசாமேலே ஆசை வெச்சேன் நானையா

கண்ணம்மா ஓ.. ஓ..
கண்ணம்மா ஓ.. ஓ..

படம்: காதல் கவிதை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா
வரிகள்: அகத்தியன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam