Monday, March 31, 2008

351. காலை நேரப் பூங்குயில்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது:





SPB/எஸ்.ஜானகி பாடியது:




காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தோனுது
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குது
கேட்டப் பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்

(காலை நேரப் பூங்குயில்)

மேடை போடும் பெளர்ணமி
ஆடிப்பாடும் ஓர் நதி
வெள்ள ஒளியினில் மேகலை
மெல்ல மயங்குது என் நிலை
புதிய மேகம் கவிதை பாடும்
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

( காலை நேரப் பூங்குயில்)

இளமை என்னும் மோகனம்
இணைந்து பாடும் என் மனம்
பட்டு விரித்தது புல்வெளி
பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல்
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை நேரப் பூங்குயில்)

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

Sunday, March 30, 2008

350. பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்


பாடவா தேனென கம்பனின் ஒரு பாடல்
உங்களை வீணையாய் மீட்டிடும் ஒரு பாடல்
நேசிப்பதே நெஞ்சின் மழையாய் நினைக்கின்றேன்
ஆனாலும் ஏன் நஞ்சின் நதியில் குளிக்கின்றேன்
என் பாடலால் உலகே இன்று மூழ்கத்தான் போகிறதே
(பாடவா..)

நெஞ்சுக்குள் மேகங்கள்
நெஞ்சுக்குள் மேகங்கள்
நகர்கின்ற நேரங்கள் விழியோரம் வருகின்றாய்
உயிரெல்லாம் நிறைகின்றாய்
பல ஜென்மம் பழகியதாய் உடல் எங்கும் ஒரு மின்னல்
ஒரு பூஞ்சோலை சூழ்ந்த தீவினில் மழையோடு
தினம் வாழ்கின்றதாக ஞாபகம் இழையோடும்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
ஒரு மனிதனை முழுதாய் மாற்றும் காதல் தான்
(பாடவா..)

ஆகாயம் தீண்டவே
ஆகாயம் தீண்டவே
ஆவேசம் வந்ததே இளம் தென்றல் இசை கொடுக்க
இள மங்கை கை கொடுக்க
கனவெல்லாம் நிஜமாக கண் எதிரே தொலைந்தாளே
நிலவுக்கு மலர்களும் தூரம் ஓர் நேரம்
மலர்ந்திட கைகளை நீட்டும் ஆனாலும்
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
என் வெற்றியின் முதுகாய் உள்ளவள் நீதானே
ஓ ப்ரேமா.. ஓ.. ப்ரேமா

படம்: வெற்றி
இசை: ஹர்ரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

349. வரான் வரான் பூச்சாண்டி



வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
[வரான் வரான்...]

ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
[வரான் வரான்...]

ஏழு கடல தாண்டி.....
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி......
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]

கொல்லிமலை தாண்டி.....
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி.....
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
[வரான் வரான்...]


ஆல்பம்: இரண்டு பேர்
இசை: சுனில் வர்மா
பாடியவர்: ஆபாவாணன்

Saturday, March 29, 2008

348. அழகிய அசுரா



அழகிய அசுரா அழகிய அசுரா
அத்துமீர ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்டவில்லையா?
(அழகிய அசுரா..)

வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சொட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று
உன்னை அடைவேன்
(அழகிய அசுரா..)

கடல் நீலத்தில் கண்கள்
கொண்ட பெண்ணிடம் செல்வம் சேரும்
கருங்கூந்தலின் பெண்கள்
தொட்ட காரியம் வெற்றி ஆகும்
உச்சந்தலையில் உள்ள
என் அர்ஜுனா மச்சம் சொல்லும்
என்னை சேர்பவன் யாரும்
அவன் சகலமும்
பெற்று வாழ்வான் என்று
(அழகிய அசுரா..)

கனாவொன்றிலே நேற்று
ரெண்டு பாம்புகள் பின்னே கண்டேன்
நகம் பத்திலும் பூக்கள்
மாறி மாறியே பூக்க கண்டேன்
விழுகும் போதே வானில்
ஏறி நட்சத்திரத்தை கண்டேன்
நிகழும் யாது நன்றாய்
தினம் நிகழ்ந்திட தானே நானும் கண்டேன்
(அழகிய அசுரா..)

படம்: விசில்
இசை: D இமான்
பாடியவர்: அனிதா சந்திரசேகர்

347. மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே



மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ.. லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
(மின்னல் ஒரு கோடி..)

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினாய் நான் மழையாகினேன்
நீ வாடினாய் என் உயிர் தேடினேன்

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை தேன் வார்த்ததே

மழையில் நனையும் பனி மலராய் போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
(மின்னல் ஒரு கோடி..)

படம்: வி.ஐ.பி
இசை: ரஞ்சித் பரோத்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா

Friday, March 28, 2008

346. நட்பே நட்பே இனி நட்பில் தித்தித்தோம்



நட்பே நட்பே இனி நட்பில் தித்தித்தோம்
நட்பே நட்பே இனி எங்கே சந்திப்போம்
அட வருஷம் மூன்று என்பது
ஒரு நிமிஷம் ஆகி போனது
விளையாட்டு விளையாட்டு விளையாட்டா
நாம் காலில் உதைத்த பந்துகள்
இன்று தொண்டை குழியில் உருளுது
இந்த உறவும் இந்த பிரிவும் இனி எங்கும் கிடைக்காதே
(நட்பே நட்பே..)

நல்ல புத்தகம் போல் நம்மை நாமே தினம் வாசித்தோம்
அந்த நூலகம் நடந்திடுமா?
நித்தம் அறுசுவை அரட்டையில் பசியாறினோம்
அந்த உணவகம் மறந்திடுமா?
கெட்ட பழக்கங்கள் பல கற்றுக்கொண்டோம்
நல்ல இதயத்தை நாம் சுமந்து சென்றோம்
பாடம் சொல்லியது கையளவு
இளமை சொல்லியது கடலளவு
இன்று அழகான கனவொன்று கலைகிறதே
(நட்பே நட்பே..)

அன்று யாரோ என்று வந்தோம் இங்கு முதல் நாளிலே
இன்று நட்பில் மனம் கை குலுக்குதே
தினம் சின்ன சின்ன சண்டை போட்ட காயம் எல்லாம்
இன்று சுகமாக வலிக்கின்றதே
எங்கு ஆண் எண்ணும் பெண் எண்ணும் பேதம்
அது ஏன் என்று நாம் கேட்டு சேர்ந்தோம்
எந்த திசைகளில் நடந்திடுவோம்?
எங்கே எவருடன் இணைந்திடுவோம்?
நாளை வரும் நாட்கள் இது போல இனிதாகுமா?
(நட்பே நட்பே..)

கடைசி பெஞ்சே பை பை
தூங்கும் சுவரே பை பை
கெமிஸ்ட்ரி லேப்வே பை பை
எஸ்.எம்.மஎஸ்ஸே பை பை
வாசிக்கும் புத்தகமே பை பை
கல்லூரி முதல்வனே பை பை
மாதுளம் பழங்களே பை பை
போய் வந்த சாலைகளே பை பை

படம்: விசில்
இசை: D இம்மான்
பாடியவர்கள்: TR சிலம்பரசன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

345. காக்கைச் சிறகினிலே ....

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா; (காக்கை)
2.பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா; (காக்கை)
3. கேட்கு மொழியிலெல்லாம் நந்தலாலா- நின்றன்
கீதமிசைக்குதடா நந்தலாலா; (காக்கை)
4. தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா- நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா...நந்தலாலா... நந்தலாலா (காக்கை)

விரும்பி கேட்டவர் :சிவிஆர்

பாடலை எழுதியவர்: பாரதியார்
பாடலைப்பாடியவர் : KJஜேசுதாஸ்
இசை: L.வைத்யநாதன்
படம்:ஏழாவது மனிதன்

Get this widget
Track details
eSnips Social DNA

344. சகியே சகியே சகித்தால் என்ன



சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக
(சகியே..)

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன
உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மணி ஏழு பத்தோடு
உந்த காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும்
மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நாந்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே
ஏன் என்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே
(சகியே..)

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் வடிந்ததென்ன
உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும்
நகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்றும்
வானில் அசரீரி ஒலித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது
(சகியே..)

படம்: யூத்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
வரிகள்: வைரமுத்து

Thursday, March 27, 2008

343. கண் முன்னே எத்தனை நிலவு



கண் முன்னே எத்தனை நிலவு காலையிலே
கலர் கலராய் எத்தனை பூக்கள் சாலையிலே
ஏன் உடம்பினில் உடம்பினில் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எதையோ வேண்டும் காதலிலே

வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே
இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே
வலி என்பது இனிதானே
அது கூட சுகம்தானே
ஒரு முறைதான் உரசி போடி பார்வையிலே

அடி 15 போனது 16 வந்தது
தாவனி பார்த்தேன் மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே...

இரக்கம் இல்லையோ?
உன் இதழ் கண்டால்
என் இதழினில் சிறை பிடிப்பேன்
உன் கரம் தந்தால்
என் கரம் கொண்டு
காலம் பிடித்திருப்பேன்
(அடி 15..)

ராத்திரியில் கனவுக்கு காரணம் பெண்தான்
ரகசியமாய் பார்க்க தோன்றும் அவள் முகம்தானே
வேளைக்கொரு பெண்தான் பிறக்க வேண்டும்
வேண்டிய வயதில் அவள் இருந்திட வேண்டும்

அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்க பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
ஓஹோஹோ..
(வயதுக்கு..)

பெண்ணே நீ காதல் செய்ய வேண்டும்
இளமையிலே கல்வியோடு காதலும் வேண்டும்
காற்றில்லா இடத்துக்கும் நான் போவேன்
கண்ணேதிரே பெண் இருந்தால்
நான் கண்மூடி வாழ்வேன்

உன் தகப்பன் திமிரையும் ஏற்றுக்கொள்வேன்
உன் தாயின் திட்டையும் ஏற்றுக்கொள்வேன்
உன் அண்ணன் அடியும் வாங்கிகொள்வேன்
நீ எனது அருகில் நின்றாலே
ஹேஹேஹோ..
(வயதுக்கு..)
(இரக்கம்..)
(அடி 15..)

அடி 15.. 16..
தாவனி.. மீசை வந்தது
தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே..

படம்: துள்ளுவதோ இளமை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, திம்மி

342. காதல் ஆராரோ



காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ
கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ?
மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே
உன்னில் நானே வெளியில் தேடாதே
(மின்னல்..)
(காதல்..)
தரையில் மீன்கள் கண்கள் ஆனதே
தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே
(தரையில்..)

மனசு மனசு இன்று வலையோசை ஆனதே
கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே
(மனசு..)
இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே
நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூராதே
காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம்
(காதல்..)

எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்
திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்
(எறியும்)
தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே
பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே
நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே
(காதல்..)

படம்: நரசிம்மா
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: சாய்சிவன், மகாலெட்சுமி ஐயர்

Wednesday, March 26, 2008

341.கைத்தல நிறைகனி

கொஞ்சம் வித்தியாசமான பிண்ணனி இசையோடு ....
இசை:லதா ரஜினிகாந்த்
பாடியவர் :நித்யஸ்ரீ
ஆல்பம்:ஆண்டவன் ஆத்மா ஆன்மீகம்
விரும்பிக்கேட்டவர்:மணிவேலன்
கீழே வீடியோவைத்தேடாதீர்கள் .. ஆடியோமட்டுமே..



கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக் (கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும் (கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை (மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி (அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே. (அக்குற)

Tuesday, March 25, 2008

340. ஆகாயம் பூக்கள் விற்க



ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)

ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)

சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோலைக்கதிர்..)
கொப்பளத்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புள்ளிளும்
கூடி ஏறும் விடியற் காலம்

குறவை மீன் தாவி துள்ளுவதே
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை பூச்சியொரே
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)

ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானம்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கண்ணாலே வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளும்
நான் அங்கே வளைந்ததென்று
நக்கை பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)

படம்: விண்ணுக்கும் மண்ணுக்கும்
இசை: சிற்பி

பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: விவேகா

Monday, March 24, 2008

339.முன்பே வா என் அன்பே வா

பெண் :முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)
விரும்பிக்கேட்டவர்: ரேணு சக்கரவர்த்தி
பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை : ஏஆர் ரகுமான்














Get this widget
Track details
eSnips Social DNA

338. கத்தாழ கண்ணால






கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட..தா....(2)

கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு
கத்தாழ கண்ணால குத்தாதே நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ
தழதழவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவெனப் பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க

(கத்தாழ கண்ணால )


தழுதழுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவெனப் பற்கள் கண் கூசுதே
பகலிரவுகள் என்னைப் பந்தாடுதே
உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால )

படம்: அஞ்சாதே
இசை: சுந்தர் சி.பாபு
பாடல்: கபிலன்
பாடியவர்: நவீன் மாதவ் & குழுவினர்

Sunday, March 23, 2008

337. துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே!

புல்லாங்குழல் மயக்கும்

ஜேஸுதாஸ் குரல்குழையும் அசத்தலான பாடல்.

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)



பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)



அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா... (துள்ளித்துள்ளி)

விரும்பிக்கேட்டவர்:நாகூர் இஸ்மாயில்

படம்: வெளிச்சம்
பாடியவர் KJ ஜேஸுதாஸ்
இசையமைத்தவர் : மனோஜ்க்யான்













Get this widget Track details eSnips Social DNA
வீடியோ பாக்கனுமா?

Saturday, March 22, 2008

336. கஜிராஹோ கனவில் ஓர்



கஜிராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோ மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரவில் தினன தீம்தனா
துள்ளுகின்ற பொழுது இணைய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே
சிறையின் மொழிகளை பழகலாம்
(கஜிராஹோ..)

என் தேகம் முழுவதும் மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே
பூவின் உள் பனித்துளி தூறுது தூறுது தூறுதே
பனியோடு தேண்துளி ஊருது ஊருது ஊருதே
காமனின் வழிப்பாடு உடலினை கொண்டாடு
தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி திறக்கலாம்
(கஜிராஹோ..)

தீராத உன் உடல் நெளியுது வளையுது மூழ்கவா
தண்டோடு தாமரை மூழ்கிடும் கைகளை ஏந்தவா
மேலாடை நீயென மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதிலே மோகன ராட்டிணம் ஆடவா
பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு
எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது
(கஜிராஹோ..)

படம்: ஒரு நாள் ஒரு கனவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

335. என் மனசை பறித்துச் சென்ற...



என் மனசை பறித்துச் சென்ற
கள்வனே நீ யாரோ
என் வயசை உணர வைத்த
தூயவனே யாரோ
கண்களிலே ஒரு கனவு
இதயமெல்லாம் உன் நினைவு
பூங்காற்றே என் மனதில்
பூத்தது புது உறவு
ராரே ராரே ராரேரோ
ஓஹோஹோ ராரேராரேரோ
ராரே ராரே ராரேரோ
ஓஹோஹோ ராரேராரேரோ
என் மனசை.. நீ யாரோ
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ

நீ வந்து தீண்டும் போது
நெஞ்சினிலே பூப்பூக்கும்
சின்ன சின்ன பார்வையாலே
மேனி எங்கும் சிலிர்த்துவிடும்
உன் விரல்களால் பதியும் காயங்கள் சுகமே
அணைக்கும் போது அலைபாயுதே மனமே
சொந்தம் என்றொரு போர்வை கொடு
தலையணையாய் நான் என்னை தந்திடுவேன்
நானே நானே..
(என் மனசை..)

படம்: ஆண்டாள்
இசை: சுரேஷ் ரோகன்
பாடியவர்: ஷர்மிளா சிவகுரு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சவுண்ட்பார்ட்டி உதயகுமாருக்காக இந்த பாடலை ஸ்பெஷலா டெடிக்கேட் பண்ணுவோம். :-)

Friday, March 21, 2008

334. அடி ராக்கம்மா கையைத் தட்டு



அடி ராக்கம்மா கையைத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு
இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப்பூ மாலை கட்டு
அதை ராசாத்தி தோளில் இட்டு
தினம் ராவெல்லாம் தாளம் தட்டு

இது கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதைக் கட்டிப் போட ஒரு சூரன் ஏது

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்குச்சா

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்
மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊரு சனம் யாவும் ஒத்துமையாச் சேரும்
வம்பும் தும்பும் இல்லை நீ பாரு

மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வானம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு

முத்தம்மா முத்தம் சிந்து
பனி முத்துப் போல் நித்தம் வந்து
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு
அடி பக்கம் நீதான் ஒரு வைக்கப்போரு
உன்ன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப் போரு

(ஜாங்குஜக்கு)

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட மாமா நீ ஜல்லிக்கட்டு
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு


வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஒளி விளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு
பட்டப் பகலாச்சு எங்கும் இன்பம் என்னும் பூப்பூத்து

நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்
உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

கண்ணம்மா கன்னம் தொட்டு
சொகம் காட்டம்மா சின்ன மெட்டு
பூமாலை வெச்சுப்புட்டு
புது பாட்டெல்லாம் வெளுத்துக் கட்டு

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்ப்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு
அட ஒன்னப் போல இங்கு நானுந்தாண்டி
அடி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்கு ஜக்கு)

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு
அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசாப் பூ மாலை கட்டு



படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா

333. இது ஒரு பொன்மாலை பொழுது



ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...

ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ... (இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்... (இது ஒரு)

ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...
ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்...

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Thursday, March 20, 2008

332. பூக்களின் காதினில்



பூக்களின் காதினில் வண்டுகள் ரகசிய
பாடல்கள் பாடுது காதலுடன்
மூங்கில் துளையினில் மெல்லிய காற்று
மோகனம் இசைக்குது காதலுடன்
(பூக்களின்..)

இதயங்கள் துடிக்குது ஆவலுடன்
கடிதங்கள் பறக்குது காதலுடன்
அவரவர் மனதினில் அவரவர் அளவுக்கு
சிறகுகள் காதலுடன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நேற்று வரை ஒரு யாசகனாய்
உன் பார்வைக்கு காத்திருந்தேன்
பல ஆசைகளை நான் சுமந்தபடி
உன் வருகைக்கு தவமிருந்தேன்
தேவதையே உன் தேவை என்ன
உடன் மரங்களை கேட்டுவிடு
சிறு கண்ணசைவில் உன் காதலனை
ஒரு வள்ளல் ஆக்கிவிடு
வானத்து வானத்து நிலவெடுத்து
நீ வாசலில் வாசலில் வெளிச்சமிடு
பூசணி பூசணி பூப்பரித்து
புது புள்ளிகள் வைத்து கோலமிடு
என் கனவுகள் யாவையும்
உன் வசம் தந்தேன்
நிஜமாய் நிஜமாய் மாற்றிவிடு

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

நிலவினிலே உன் பெயரெழுதி
நான் இரவினில் ரசித்திருப்பேன்
என் உயிரினிலே உன் பெயரெழுதி
நான் தினம் தினம் உச்சரிப்பேன்
சூரியனை நான் சிறைப்பிடித்து
உன் மூக்குத்தி ஆக்கிடவா
அடி சிம்ஃபனியில் உன் சிரிப்பொலியை
ஒரு சுரமாய் சேர்த்திடவா
காதலில் காதலை காதலனே
பல காலமும் ஆயிரம் பொய்கள் உண்டு
ஆயினும் ஆயினும் உன் போல
பொய் அழகாய் யாரும் சொன்னதில்லை
உன் கவிதையின் காதலை பொய் என்றாலும்
நிஜமாய் நிஜமாய் நேசிக்கிறேன்

காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
காதலுடன் உன் காதலுடன்
காதலுடன் உயிர் காதலுடன்
(பூக்களின்..)

படம்: காதலுடன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

331. நீ பார்த்திடல் அழகு



நீ பார்த்திடல் அழகு
நீ பேசிடல் அழகு
நீ ரசித்திடல் அழகு
அதனால் நான் அழகு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)

திங்கள் தரையிறங்கி தென்றல் சேர்ந்திணைந்து
ஆடை சூழ்ந்தழகு பெண்ணே
தீயில் சிவப்பெடுத்து கொள்ளன் கோர்த்தெடுத்த
தங்கம் படிந்தழகு பெண்ணே
உன் சிறு மொழி வார்த்தை தீண்டியதால்
என் விழியது மனிதனை தேடியதே
நீ சொன்ன ஒரு வரியில்
இங்கு மலர்ந்திடும் புது மொழியே
தமிழே நீ யார் என்று சொல்லி விடு
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)

விண்ணில் தவங்கள் செய்து மண்ணில் வசந்தம் தந்த
நவம்பர் மாத மழை நீயே
கேட்கும் மொழி அறிந்து தீர்ப்பாய் எனை புரிந்து
ஆசை தீர்த்தழகு நீயே
உன் கருவிழி பார்வை ஒளி கொடுத்தால்
நம் கனவுகள் நாளும் சுடர் விழுமே
நீ மிதக்கும் கனவுகளில் என்றும்
நான் பிறப்பேன் உன் மடியில்
உயிரே நீ யார் என்று சொல்லிடவா
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
(நீ பார்த்திடல்..)
அழகு ஆ.. அழகு..

படம்: நவம்பர் 24
இசை: லாரன்ஸ்
பாடியவர்கள்: நரேன், ஷர்மிளா சிவகுரு

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

Wednesday, March 19, 2008

330. கவிதை கேளுங்கள்



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
(பூமி..)
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
(கவிதை..)

நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை
காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
புரியுமா இவள் மனம்
இது விடுகதை...
(கவிதை..)

ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த தீம்த தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து
துடி துடிக்குது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விழியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்

ஓம்...

ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட
ஓம் தகிட தடீம் பாதங்கள் ஆட
ஜகம் நடுங்க என் பாதங்கள் ஆட

படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Tuesday, March 18, 2008

329.என்னுள்ளே ஏதோ ...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...ம்..
(என்னுள்ளே)
என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க -பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ ஆ ஆ
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?
(என்னுள்ளே)
மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ ஆ ஆ
மல்லிகைமுல்லையின் மாலைகளே
மார்கழிமாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?
(என்னுள்ளே)

விரும்பிக் கேட்டவர் ஐயப்பன் கிருஷ்ணன்




படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை:இளையராஜா

328. உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன



உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
(உன்ன நெனச்சேன்..)
அந்த வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
(உன்னை நெனச்சு..)

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்லவேண்டும்
கொட்டும் மழைக்காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்புக்கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞானத்தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)

கண்ணிரெண்டில் நாந்தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கும் நன்றி உரைப்பேன் உனக்கு
நான்தான்..
(உன்னை நெனச்சு..)

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: அர்சாத்

Monday, March 17, 2008

327வயக்காடு மச்சினன் வயக்காடு

படம்: பரம்பரை
பாடகர்கள்: மனோ, சித்ரா
இசை: தேவா

எனது பெங்களூரு தோழர் திரு. ஆர்.ஜி.நாராயனன் அவர்களின் விருப்பப்பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA



வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு

அஞ்சு மணி மஞசள் வானத்தைப்பார்த்தா
நெஞ்சுகுள்ளே சுகம் நெளியுது காத்தா

ஒன்னுகொன்னா உடல் ஒரசனும் கூத்தா
ஒத்துகிட்டா பொன்னு உன்ன விடமாட்டா

பாடி பார்க்கும் மனசு
தொட தேடி துடிக்கும் வயசு

வயக்காடு மச்சினன் வயக்காடு ஹோ
மடியோடு மடக்கி நீ போடு

சிக்கு சிக்கு சின்ன பொன்னு
எக்கச்சக்க கற்பணையில்
வைக்க வந்தா முத்தம் வைக்க வந்தா

கொக்கு கொக்கு சாமகொக்கு
கொத்துகிற வித்தையிலெயே சிக்கி கிட்டா
தண்ணில் விக்கி கிட்டா

ஆடி ரெட்ட குடில் பாட்டு
வட்டி முதல் கெட்டு ஒட்டி உறவாடலாம்

தொட்ட இடம் பூக்கும்
மொத்த இடம் வெர்க்க
கட்டில் திரை பொடா வா

ஹேஎ சொல்ல சொல்ல மனம் இனிக்குது தேனா
சுந்தரியே இனி உன்ன விடுவேனா

மல்லியப்பூ வைக்க மறப்பவள நானா
சொன்னப்படி இனி திறக்குமே தானா

சோலைவனத்து கரும்பே ஹே
ஆடி சேலை கொடியில் அள்ளுவேன்

வயக்காடு மச்சினன் வயக்காடு

மடியோடு மடக்கி நீ போடு

மொட்டு மொட்டு முல்லை மொட்டு
முன்னும் பின்னும் மெல்ல தட்டு
வட்டமிடு என்னை வட்டமிடு

ஆஹா தட்டு தட்டு தங்கதட்டு
தட்டு மேல பூந்தி லட்டு
புட்டு கொடு கொஞ்சம் புட்டு கொடு

ஆஹா உன்ன அழுக்காம
ஒன்ன இருக்காம
உள்ளம் கெடக்குது வெளியே

ஆஹா கண்ணில் இடம் கேட்டு
கண்ணி வெடி போட்டு
என்ன நடத்து கிளியே

ஓஒ கத்திரிபூ இத காதுல வாங்கி
சுத்துதய்யா அந்த சுகத்துக்கு ஏங்கி

ஆஹா முப்பது நாலும் மடியில தூங்கி
முதமிடு என்ன மனசுல தாங்கி

சோளம் வெளஞ்சு கெடக்கு
ஒரு ஜோடி அதுக்கு இருக்கு

வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு

ஓஓ அஞ்சு மணி மஞசள் வானத்தைப்பார்த்தா
நெஞ்சுகுள்ளே கொஞ்சம் நெளியுது காத்தா

ஒன்னுகொன்னா உடல் ஒரசனும் கூத்தா
ஒத்துகிட்டா பொன்னு உன்ன விடமாட்டா
பாடி பார்க்கும் மனசு
தொட தேடி துடிக்கும் வயசு

வயக்காடு மச்சினன் வயக்காடு

மடியோடு மடக்கி நீ போடு

326. என் கண்ணோடு நெஞ்சோடு



என் கண்ணோடு நெஞ்சோடு மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் என்று
நான் அன்றே கண்டேன்
அந்த சதோசத்தில்
தூள் தூளாகிறேன் ஓஹோ..
(என் கண்ணோடு..)

ஏன் என் மனம் எம்பி குதித்துதான்
கடலும் மலைகளும் தாண்டுதோ
ஏன் என் நிழல் ஆதிவாசிப்போல்
ஆடை மறந்துதான் திரியுதோ
விண்ணை தாண்டி வெளியே சென்றேன்
உன்னை பாத்ததால் பறக்கிறேன்
எல்லை மீறி இன்பம் கொண்டேன்
உன்னை கண்டதில் சிலிர்க்கிறேன்
தாங்க முடியாத ஆனந்தம்
தூங்க முடியாத பேர் இன்பம் ஓஹோ..
(என் கண்ணோடு..)

படம்: அறிந்தும் அறியாமலும்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, நிதிஸ் கோபாலன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

325. மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே



மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரையாகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் இளம் புயல் நெஞ்சில் வீசியதால்
அழகானேன் புதிதாய் பிறந்தேன்
(மனசுக்குள்..)

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறந்தின்று விடுதலை தருகிறேன்
வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நாடகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
(மனசுக்குள்..)

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் பேபி என்பேன்
(மனசுக்குள்..)

படம்: அஞ்சாதே
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: ஷ்வேதா

Sunday, March 16, 2008

324. மார்கழியில் குளிச்சு பாரு

படம்: ஒன்பது ரூபா நோட்டு
நடிகர்: சத்யராஜ், அர்ச்சனா
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், பரத்வாஜ்


Get Your Own Music Player at Music Plugin

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
ஆளில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாமி பழகிப் போகும்

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

என்னோடு சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்
இப்போதிருந்தே உலகத்தையே எழுதிக்கிட்டேன்
துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல
ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல
சூழும் காத்து சுத்துது பார்த்து
பசிச்சா கொஞ்சம் படுத்தா உறக்கம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
நான் சொன்னாக்கா பலவிதமா சுத்துதடா பூமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

காசு பணம் சந்தோசம் தருவதில்ல
வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல
போதுமின்னு மனசு எப்போ சொன்னதில்ல
தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல
வேப்பமர நிழலு வீசுதடி பூங்குயிலு
மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்
போதுமடா போதுமடா போதுமடா சாமி
அட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்
மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்
ஆளில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்
சந்தோசத்த வெறுத்து பாரு சாமி பழகிப் போகும்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

323. என் அன்பே என் அன்பே



என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி
என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையாடுதே
இந்த பாறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரதத்தில் விளையாடுதே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இது தானோ காதல் என்றறிந்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
முப்படை கொண்டு என்னை சுற்றி வளைத்தாயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்
அட கொஞ்ச கொஞ்சமாய் என்னை வாட்டினாய்
கொஞ்ச கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுப்பக்கம் நீ காட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி
(என் அன்பே..)
ஓ சகி ஓ சகி
ப்ரியசகி ப்ரியசகி

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சங்கர் மகாதேவன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Saturday, March 15, 2008

322. கனா காணும் காலங்கள்



கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு ஒரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஓசை ஆ..
(கனா காணும்..)

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போனா விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ..
(கனா காணும்..)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்தி வேலை அழைக்கிறதே
அதி காலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படப்படப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன்
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை ஆ..
(கனா காணும்..)

படம்: 7G ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, மதுமிதா, உஸ்தாட் சுல்தான் கான்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

321. நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி



நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான்தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுப்போல் வேரெங்கும் சொர்கமில்லை
உயிரே வா

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
(நீ பார்த்த..)

படம்: ஹேராம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

320. உயிரே என் உயிரே



உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


இதுவரை எங்கிருந்தோ
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்


உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா


நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்


எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

(உயிரே என் உயிரே)

உன்னுடன் இருக்கையிலே
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா


உன்னுடன் நடக்கையிலே
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே


நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

(உயிரே என் உயிரே)


படம் : தொட்டி ஜெயா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக், அனுராதா ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ

Friday, March 14, 2008

319. வானிலே தேனிலா ஆடுதே பாடுதே



வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான் தானே
(வானிலே..)

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார் தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்
(வானிலே..)

பூவை போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே
(வானிலே..)

படம்: காக்கி சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Wednesday, March 12, 2008

318. நான் தேடும் செவ்வந்தி பூவிது



நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

(நான் தேடும்)


பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி
ஆ...ஆ...
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழுமென தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு ராசாவே நாளாச்சு

(நான் தேடும்)

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ
தள்ளாடும் என் தேகம் தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா
ஆ....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

(நான் தேடும்)


படம் : தர்மபத்தினி
இசை : இளையராஜா
பாடியவர்: இளையராஜா, ஜானகி

Friday, March 7, 2008

317. அண்ணாத்த ஆடுறார்




அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
காட்டோரம் மேயும் குறும்பாடு அதை
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

(அண்ணாத்த)

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
தேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆளுதான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட ஹோய் ஹோய்
மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பந்தாட ஹோய் ஹோய்
கில்லாடி ஊரிலே யாராடா கூறடா
மல்லாடி பார்ப்பமா வாங்கடா
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே
எந்த தோட்டாவும் என்னைத் துளைகாதே

(அண்ணாத்த)


அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே சொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக
நியாயம் இல்லாத பொல்லாரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட குத்தினா குத்துவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு நான் வித்தையைக் காட்டுவேன் என் கித்தாப்பு

வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும்
வந்திங்கே வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே
எந்த தோட்டாவும் என்னைத் துளைக்காதே


(அண்ணாத்த)

படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சூடான் புலி நாகை சிவா பிறந்தநாள் சிறப்பு பாடல்!!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி!!

316. புல் பேசும் பூ பேசும்





புல் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வாய் பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை
பெண் பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும்
கடை விரித்துக் கண் வீசும்
நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை

மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம்
இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்!


ஒரு பக்கம் எரியுதடி மறுபக்கம் குளிருதடி முன்ஜென்மம் தெரியுதடி
சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம்

வா வா என்றது இன்பம் நில் நில் சொன்னது நெஞ்சம்
நீ நான் என்பது மாயை போ போ ஓட்டிடு பேயை


போதையில் நீ விழுந்தால் அங்கே கூச்சங்கள் கிடையாது
பள்ளத்திலே பாயும் நதிகள் மலை மேல் ஏறாது

படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது
காலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காது


விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம்
இதுதானே வாழ்க்கை மொத்தம் இதிலென்ன வேஷம்!


உன்னைக்கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன்
உனக்கு வேண்டியத வாங்கித்தாறேன்
என் வீட்டுக்குத்தான் கூட வாடி
எங்கு போனாலும் கூட வா நீ
நேற்று உன்னைப் பார்க்கலையே
அட இன்னிக்கு நான் தூங்கலையே

காலையில என்னாகும்
அட கல்யாணம் யாருக்காகும்
காலையில என்னாகும்
அட கல்யாணம் யாருக்காகும்


போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரமாகுமா
போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரமாகுமா
கெட்டபின் நாணம் ஏனம்மா
அட கட்டிலில் நியாயம் தர்மமா


படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: முத்துகுமார்
பாடியவர்: விஜய் யேசுதாஸ், தன்வி

Thursday, March 6, 2008

315. யார் யாரோ அவன்



சன் சனனன சன் சனனன சன்
யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்
சன் சனனன சன் சனனன சன்
யார் யாரோ யாரோ யாரோ யாரோ அவன்
என்னை வெல்லும் ராஜராஜன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

என்னைப் போல யாரும் இல்லை
தேடிப் பார்த்தும் காணவில்லை
மாயலோகப் பூவைப் போல் அழகானவன்
அன்பாய் மோதும் காற்றே நீ கண்டால் சொல்லு
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

தாலாட்டு ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் பூவானேன்
தாலாட்டு ஓடை நீரில் நான்
தேன் துளிகள் சிந்தும் பூவானேன்
மீனாய் வந்தால் நீயும் இந்த நீரின்
இனிமை அறிவாயோ
வானில் போகும் மூன்றாம் பிறை
யாரோ இல்லை நானே நானே
எங்கோப் போகும் அந்த மேகம் கூட
பூவைத் தோளைத் தொட ஆசைப்படும்
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைக்கில்லை
நான் காதல் கொண்ட தாமரை
என் காதல் விற்பனைக்கில்லை
ஹோ என் காலில் நகமாய்
வாழக் கூட யாரும் இல்லை
பொன் வானத்தில் பூலோகத்தில்
என் வாசம்தான் என் சுவாசம்தான்
கவிதைப் போலே வாழும் என்னைப்
படிக்கும் கவிஞன் யாருமில்லை
யார் யார் யாரோ அவன் யாரோ அவன்

(சன் சனனன சன்)

படம்: சாம்ராட் அசோகா

314. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது



http://youtube.com/watch?v=g8bLnX2ft4E&feature=related

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே..
(யாரது..)

மார்கழி பூக்கள் என்னை தீண்டும் ஆ ஆ..
மார்கழி பூக்கள் என்னை தீண்டும்
நேரமே வா
தேன் தரும் மேகம் வந்து போகும்
சிந்து பாடும் இன்பமே
ரோஜாக்கள் பூமேடை போடும்
தென்றல் வரும்
பார்த்தாலும் போதை தரும்
(யாரது..)

தாமரை ஓடை இன்ப வாடை ஆ ஆ..
தாமரை ஓடை இன்ப வாடை
வீசுதே வா
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்
இன்ப சாறும் ஊருதே
ஆளானதால் வந்த தொல்லை
காதல் முல்லை
கண்ணோடு தூக்கம் இல்லை
(யாரது..)

படம்: நெஞ்சமெல்லாம் நீயே
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: வாணி ஜெயராம்

விரும்பி கேட்டவர்: ஜெயராதாசிங்

Wednesday, March 5, 2008

313. என் உசுருக்குள்ள தீய வச்சான் ஐயயோ



ஏலே...ஏலேலே...! ஏலே...ஏலேலே...!
ஒத்த பன மரத்துல செத்த நேரம் உம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன், சங்கதிய சொல்லித் தரேன்
வாடி..நீ வாடி!

பத்துக்கல்லு பாலத்துல மேச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள, கூச்சம் கீச்சம் தேவை இல்லை
வாடி..நீ வாடி!
ஏலே...ஏலேலே...!
செவ்வாழ நீ சின்னக்கனி! உன்ன
செறையெடுக்கப் போறேன் வாடி!

ஐயயோ!
என் உசுருக்குள்ள தீய வச்சான் ஐயயோ!
என் மனசுக்குள்ள நோயத் தச்சான் ஐயயோ!

சண்டாளி உன் பாசத்தால, நானும்
சுண்டெலியா ஆனேம்புள்ள

நீ கொன்னாக்கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள
ஐயயோ..
என் வெக்கம் பத்தி வேகுறதே ஐயயோ!
என் சமஞ்ச தேகம் சாயுறதே ஐயயோ!

அரளி வெத வாசக்காரி
ஆளக் கொல்லும் பாசக்காரி
என் உடம்பு நெஞ்சக் கீறி
நீ உள்ள வந்த கெட்டிக்காரி
ஐயயோ...
என் இடுப்பு வேட்டி எறங்கிப் போச்சே ஐயயோ!
என் மீச முறுக்கு மடங்கிப் போச்சே ஐயயோ!

கல்லுக்குள்ள தேர போல
கலஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா?
காலச் சுத்தும் நிழலப் போல
பொட்டக்காட்டில் உங்கூடவே தங்கிடவா?

ஓஹோ....!

ஐயனாரப் பாத்தாலே உன் நினப்பு தான்டா!
அம்மிக்கல்லு பூப்போல ஆகிப்போச்சு ஏன்டா?
நான் வாடாமல்லி...நீ போடா அல்லி!

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே! நீ
தொட்டா அருவா கரும்பாகுதே!
(தொரட்டி)
(சண்டாளி)

படம்: பருத்திவீரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், ஷ்ரேயா கோஷல், யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: சினேகன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

312. சங்கீத ஜாதி முல்லை



நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம் நம்தநம்தம்
நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம் நம்தம்தநம்தம்
என் நாதமே வா..

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இல்லை பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
(சங்கீத..)

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாக
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொல்லாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி..
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ ஆடிடுமோ..

ராஜ தீபமே எந்த வாசலில் வாராயோ
குயிலே குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழி இல்லை என்னும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
(விழி இலலை..)
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டே
கண்டு கொண்டும் இந்த வேதம் என்ன
ராஜ தீபமே..

படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: TBCD

311. அல்லாவை நாம் தொழுதால்


அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோரை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
(அல்லாவை..)
அல்லாவை நாம் தொழுதால்..

பள்ளிகள் பல இருந்தும்
மாந்தோசை கேட்ட பின்பும்
(பள்ளிகள்..)
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
(பள்ளி..)
(அல்லாவை..)

வழிகாட்ட மற இருந்தும்
வள்ளல் நபி இருந்தும்
(வழிகாட்ட..)
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ
(விழி..)
(அல்லாவை..)

இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
(இறையோனின்..)
இறைதூதர் போதனையை
இகமெங்கும் பரப்பிடுவோம்
(இறைதூதர்..)
(அல்லாவை..)

படம்: இறைவனிடம் கையேந்துங்கள்
பாடியவர்: நகூர் M. ஹனிஃபா

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

310. மாருகோ மாருகோ



மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)

கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
(மாருகோ..)

சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய்
ஹேய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா
ஏய் கும்மா கும்மா அடி எம்மா எம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா
ஆசையாக பேசினால் போததும்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகதும்மா
ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா
ஏத்துக்கடி என்னை சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது
(மாருகோ..)

நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேளி கட்டு
என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாக காது கடி
என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இன்னேரம் கண்டு பிடி
கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
அட தாக்குது தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து
காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசையை தீர்த்துக்கோ..
(மாருகோ..)

படம்: வெற்றிவிழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

விரும்பி கேட்டவர்: P பிரபாகர்

309. நீலவான ஓடையில


நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
(நீலவான..)

காளிதாசன் பாடினால் மேக தூரமே
தேவிதாசன் பாடுவாள் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
கூடல் ஏன் கூடும் நேரம்
(நீலவான..)

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நாந்தான்
(நீலவான..)

படம்: வாழ்வே மாயம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

308. சங்கீத மேகம்




சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே (2)
என்றும் விழாவே என் வாழ்விலே

(சங்கீத மேகம்)

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (2)
கேளாய் பூ மனமே

(சங்கீத மேகம்)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே (2)
கேளாய் பூ மனமே

(சங்கீத மேகம்)


படம்: உதயகீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Tuesday, March 4, 2008

307. எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்


எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே..
(எங்கெங்கோ..)

ஆ.. நான் காண்பது உன் கோலமே
அங்கும் இங்கும் எங்கும்
ஆ.. என் நெஞ்சிலே உன் எண்ணமே
அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் தேவன்
உள்ளே என் ஜீவன்
நீ நீ நீ..
(எங்கெங்கோ..)

ஆ.. கல்லானவன் பூவாகிறேன்
கண்ணே உன்னை எண்ணி
ஆ.. பூவாசமும் பொன்மஞ்சமும்
என்றோ எங்கோ ராஜா
எதற்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்வேன்
நான் நீ நாம்..
(எங்கெங்கோ..)

படம்: பட்டாக்கத்தி பைரவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

விரும்பி கேட்டவர்: வடுவூர் குமார்

306. மலரே தென்றல் பாடும் கானம் இது



மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
(மலரே..)

நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ..
எவர் இதை மாற்றுவது
(மலரே..)

பூபாலம் கேட்கும் அதிகாலையும்
பூஞ்சோலை பூக்கும் இளமாலையும்
நீ அன்றி ஏது ஒரு ஞாபகம்
நீ பேசும் பேச்சில் மணிவாசகம்
உள்ளம் எனும் வீடெங்கும்
உன்னழகை நாந்தானே
சித்திரத்தை போல் என்றும்
ஒட்டி வைத்து பார்த்தேனே
உனைத் தழுவும் இளந்தளிரே
உனக்கென நான் வாழ்கிறேன்
(மலரே..)

மாங்கல்யம் சூடும் மண நாள் வரும்
கல்யாண மாலை இரு தோள் வரும்
வாயார வாழ்த்த இந்த ஊர் வரும்
ஊர்கோலம் போக மணி தேர் வரும்
சொல்லியது போலே நம்
சொப்பணங்கள் கை கூடும்
வந்ததொரு வாழ்வென்றே
சிந்து கதிர் கண் பாடும்
வலைக்கரமும் துணைக்கரமும்
வரைந்திடும் தேன் காவியம்
(மலரே..)

படம்: வீட்டுல விசேஷங்க
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, S ஜானகி
வரிகள்: வாலி

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

Monday, March 3, 2008

305. மெல்ல மெல்ல என்னை தொட்டு



மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை
காட்டு ஓ.. உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு..

நீ தராததா நான் தொடாததா
சொல்லி தந்து அள்ளி கொள்ள
சொந்தமாகவில்லையே
தேகம் ஓ.. உன் தேகம்
மோகம் ஓ.. உன் தாகம்

வண்டு தேடும் பூவை கண்டு
அந்தி மாலை தூதுகள் போகும் ஓ.. தப்பாது
இது போதும் ஓ.. இப்போது
வந்து சேரும் வாழ்த்து செண்டு
ரெண்டு பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ.. பொன்னாளில்
தோளில் ஓ.. உன் மாலை
நானானனா நானானனா
யார் கண்டால் என்ன
நீ தந்தால் என்ன
(மெல்ல..)

தொட்ட போதும் விட்ட போதும்
எட்டி நின்று பார்த்ததும் ஊறும் ஓ.. கல் ஊறும்
நானும் ஓ.. பெண் நானும்
காதில் நூறு காதல் மெட்டு
சொல்லும் ஜாதி முல்லையோ மொட்டு ஓ.. பொன் சிட்டு
பட்டு ஓ.. வெண்பட்டு
லாலலாலா லாலலாலா
வா வந்தாடு நீ
ஹோ கொண்டாடு நீ
(சொல்லி..)

படம்: வாழ்க்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ராஜ்சீதாராமன், P சுசீலா

விரும்பி கேட்டவர்: TBCD

304. பெண்ணொருத்தி பெண்ணொருத்தி



பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
(பிரம்மா..)
(பெண்ணொருத்தி..)

கண்களிலே நோட்டம் பார்த்தே
கன்னத்தில் சமணம் பார்த்து
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்குதே
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்குதே
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
(பிரம்மா..)
(பெண்ணொருத்தி..)

பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என் தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
(பிரம்மா..)
(பெண்ணொருத்தி..)
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

படம்: ஜெமினி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Sunday, March 2, 2008

303. என்ன இதுவோ என்னை சுற்றியே



என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்
(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம்சுவாசக்காற்று தேவையா
(என்ன இதுவோ..)

படம்: ஆனந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: விவேகா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

302. முன் பனியா முதல் மழையா



முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
(முன் பனியா..)

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
(முன் பனியா..)
(முன் பனியா..)

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....
(முன் பனியா..)

படம்: நந்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுபா

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Saturday, March 1, 2008

301. கையில் மிதக்கும் கனவா நீ



கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்தி கொண்டே..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?...........
(கையில்..)

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
(காதல்..)

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்..
உயரம் தூரம் தெரியாது...
(உன்னை..)
உன் மேல் மற்றொரு பூ விழுந்தால்..
என்னால் தாங்க முடியாது..
(கையில்..)

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

300. என் இனிய பொன் நிலாவே



என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ....
தொடருதே தினம் தினம் ....
(என் இனிய..)

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே.....
(என் இனிய..)

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே...
(என் இனிய..)

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: கங்கை அமரன்

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

299. ஈச்சி எழுமிச்சி


Get this widget | Track details | eSnips Social DNA

மாயே மாயே யோ (4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)

ஈச்சி எழுமிச்சி ஏரி கருவாச்சு
ஈச்சி எழுமிச்சி ஏரி கருவாச்சு
தண்ணிக்குள்ள பார்த்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வச்சிருக்கும் கண்ணே சாட்சி
(ஈச்சி..)

மயமாயோ மயமாயோ யோயோயோயோ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோயோயோயோ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓ.. மாயோ ஓஓ..

ஆகாயம் பூவாளி அதுப் பாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
சிறு தண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து
தொடாத இடமும் தொடுதே
ஒத்த மழைத்துளி பார்த்த இடம்
பித்துக்குழி இவன் பார்க்கலையே
பூத்தும் அரும்பு இன்னும் பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்ச கண்ணி உன்ன தாங்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேட்கலையே
அந்திப் பகலேதும் பார்க்கலையே
மஞ்சக் கிழங்கே உன்னைப் பார்த்துப்புட்டேன்
மனசுக்குள்ள உன்னைப் போட்டு பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக்குள்ள வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள உன்னை மாட்டிக்கிட்டேன்
(ஈச்சி..)
(மாயோ..)

தொழுவோடு சேராத பொளிக்காள கூட
கொடையப் பார்த்து மிரளும்
கொடகண்டு மெரளாத கோடாளிக் காள
தாவணிப் பார்த்து மிரளும்
ம்ம்ம்...
பாசிமணி ரெண்டு கோர்க்கையில
பாவி மனசையும் கோர்த்தவளே
நீந்திக் கிடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயை வச்சிப் போனவளே
ஆஆஆ....
தத்தி நடக்குற வாத்துக் கூட்டம்
தண்ணிக்குள்ள முட்டை போடுமடி
வாத்து முட்டையப் போல
உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ..
கையில் கைய வச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்னை உடுத்திக்கடி
(ஈச்சி..)
மாயே மாயே யோ (4)

படம்: தாஜ்மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், மனோ, அருந்ததி, ரஃகிப்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ஷோபன் பாபு

Last 25 songs posted in Thenkinnam